Latestஅமெரிக்காஉலகம்சிங்கப்பூர்

120 நாட்கள் நீருக்கடியில் உயிர் வாழ்ந்து உலகச் சாதனைப் படைத்த ஜெர்மானியர்

பனாமா, ஜனவரி-25, ஜெர்மனி நாட்டின் விண்வெளிப் பொறியியளாளர் ஒருவர், பனாமா கடலில் 120 நாட்கள் காற்றழுத்தத் தாழ்வு இல்லாமல் நீருக்கடியில் வாழ்ந்து கின்னஸ் உலகச் சாதனை படைத்துள்ளார்.

59 வயது ருடிகர் கோச் (Rudiger Koch),கடலுக்கடியில் உள்ள தனது 30 சதுர மீட்டர் capsule வீட்டிலிருந்து நேற்று வெளியே வந்தார்.

இதன் மூலம், ஃபுளோரிடா குளத்தில் நீருக்கடியில் lodge-ஜில் 100 நாட்கள் வாழ்ந்த அமெரிக்கரான ஜோசப் டிடுரியின் (Joseph Dituri) சாதனையை கோச் முறியடித்தார்.

“இது ஒரு பெரிய மறக்க முடியாத அனுபவம்; இப்போது அது முடிந்துவிட்டது, உண்மையிலேயே வருத்தத்தைத் தருகிறது. இந்த 120 நாட்களையும் நான் இங்கு மிகவும் ரசித்தேன்” என  கோச் தன்னை வரவேற்க் கூடியிருந்தவர்கள் முன்னிலையில் கூறினார்.

“அமைதியடைந்து இருட்டினில் கடல் பிரகாசமாக ஒளிரும் போது அதன் அழகை விவரிக்க இயலாது, அதை நீங்களே அனுபவிக்க வேண்டும்” என்று கோச் மேலும் சொன்னார்.

அவர் இந்த 120 நாட்களும் வாழ்ந்த  capsule கலம், நவீன வாழ்க்கைக்குத் தேவையான படுக்கை, கழிப்பறை, டிவி, கணினி, இணையம், உடற்பயிற்சிக்கான சைக்கிள் உள்ளிட்ட அனைத்தையும் கொண்டிருந்தது.

வட பனாமா கடற்கரையிலிருந்து படகில் சுமார் 15 நிமிட பயண தூரத்தில், குறுகிய சுழல் படிக்கட்டு கொண்ட ஒரு குழாய் மூலம் அலைகளுக்கு மேலே அமைந்திருக்கும் ஓர் அறையுடன் கோச்சின் capsule இணைக்கப்பட்டிருந்தது.

அதன் வழியாகத் தான் அவருக்கு உணவுகள் அனுப்பப்பட்டு, பார்வையாளர்கள் மற்றும் மருத்துவர்களும் சென்று வந்துள்ளனர்.

மேற்பரப்பில் சூரிய சக்தி தகடுகள் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது; ஆபத்து அவசரத்துக்கு ஒரு ஜெனரேட்டரும் இருந்தது; ஆனால் Shower நீர் ஊற்று வசதியில்லை.

4 கேமராக்கள் capsule கலத்தில் அவரது அன்றாட வாழ்க்கையை படம்பிடித்து, அவரது மன ஆரோக்கியத்தை கண்காணித்து, அவர் ஒருபோதும் மேற்பரப்புக்கு வரவில்லை என்பதற்கான ஆதாரத்தையும் கின்னஸ் உலகச் சாதனைத் தரப்பிடம் அளித்தன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!