
வாஷிங்டன், மார்ச்-2 – உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் 14-ஆவது முறையாக தந்தையாகியுள்ளார்.
மாஸ்கின் தற்போதைய துணையும் தனது Neuralink நிறுவனத்தில் நிர்வாகியாக பணிபுரிபவருமான Shivon Zilis மூலம் அவர் மீண்டும் தந்தையானார்.
Seldon Lycurgus என அந்த ஆண் குழந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
X தளத்தில் Shivon அச்செய்தியைப் பகிர்ந்துள்ளார்.
மாஸ்க் தனது முதல் மனைவியுடன் 5 குழந்தைகளைப் பெற்றுள்ளார்; அவற்றில் இரட்டையரும் ஒரே சூழில் பிறந்த 3 குழந்தைகளும் அடங்குவர்.
எனினும் முதல் குழந்தை பிறந்த பத்தே வாரங்களில் உயிரிழந்தது.
இசைத் துறையில் உள்ள Grimes என்பவருடன் அவருக்கு மேலும் 3 குழந்தைகள் உள்ளனர்.
நிலையான எதிர்காலத்தை உறுதிச் செய்வதற்கு பெரிய குடும்பங்கள் முக்கியம் என தீவிரமாக நம்புபவர் இலோன் மாஸ்க்.
அந்நம்பிக்கைகளுக்கு ஏற்ப, மாஸ்க் தனது விந்தணுவை நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுக்கு வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
உலகளவில் குழந்தைப் பிறப்பு விகித சரிவு எதிர்காலத்திற்கு நல்லதல்ல என பிரச்சாரம் செய்து வரும் இலோன் மாஸ்க் தனது வீட்டிலிருந்தே முன்னுதாரணத்தைத் தொடங்கியுள்ளதாக வலைத்தளங்களில் பாராட்டு குவிகிறது.