
பாலேக் பூலாவ், அக் 3 – 14 வயது மாணவி கற்பழிக்கப்பட்டதன் தொடர்பில் செபெராங் பிறையிலுள்ள இடைநிலைப் பள்ளி ஆசிரியர் ஒருவர் நான்கு நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
அக்டோபர் 6ஆம் தேதிவரை 32 வயதுடைய அந்த ஆசிரியரை தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் Chia Huey Ting உத்தரவு பிறப்பித்தார்.
தண்டனைச் சட்டத்தின் 376 (2) ஆவது விதியின் கிழ் போலீஸ் விசாரணை செய்வதற்கு உதவியாக அந்த ஆசிரியரை தடுத்து வைக்கும் உததரவு பிறப்பிக்கப்பட்டது.
இதற்கு முன்னதாக போலீஸ் பாதுகாப்புடன் அந்த சந்தேகப் பேர்வழி காலை மணி 8.14 அளவில் நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டான்.
இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட பள்ளி மாணவி போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததைத் தொடர்ந்து அந்த சந்தேகப் பேர்வழி பினாங்கு தென் மேற்கு மாவட்ட போலீஸ் நிலையத்தில் சரணடைந்தாக கூறப்பட்டது.