Latestமலேசியா

15,000 ரிங்கிட்டுக்கும் மேல் வாடகை பாக்கி; பொறுமையிழந்து PPR வீட்டுக் கதவுகளைக் கழற்றிய சிரம்பான் மாநகர மன்றம்

சிரம்பான், டிசம்பர்-17 – நெகிரி செம்பிலான், சிரம்பானில் ஆண்டுக்கணக்கில் வாடகைச் செலுத்தப்படாத PPR வீடுகளின் வாசல் கதவுகள் கழற்றப்பட்டுள்ளன.

சிரம்பான் மாநகர மன்றமான MBS அந்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியது.

15,000 ரிங்கிட்டுக்கும் மேல் வாடகை பாக்கி வைத்திருப்போருக்கு எதிராக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, மாநகர மேயர் டத்தோ மஸ்ரி ரசாலி (Datuk Masri Razali) தெரிவித்தார்.

போலீஸ் ஒத்துழைப்போடு, Pangsapuri Rakyat Seri Perdana Paroi-யில் கடந்த வாரம் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

எனினும், விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்காத வகையில், மிகவும் கவனமாகவும் கண்ணியமாகவும் அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மேயர் சொன்னார்.

வாடகைச் செலுத்துவதில் சிரமத்தை எதிர்நோக்குவோருக்கு உதவும் வகையில் MBS பல்வேறு வழிமுறைகளுடன் ஏராளமான வாய்ப்புகளையும் வழங்கி விட்டது.

கடைசி முயற்சியாக 15,000 ரிங்கிட்டுக்கும் மேல் பாக்கி வைத்திருப்போருக்கு, தவணை முறையிலாவது வாடகைச் செலுத்த கடந்த ஜனவரியில் ஏற்பாடு செய்துத் தரப்பட்டது.

ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் அவர்கள் மதிக்காததால், வேறு வழியின்றி கதவைக் கழற்றும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டதாக டத்தோ மஸ்ரி சொன்னார்.

இந்த அதிரடி நடவடிக்கை இனியும் தொடருமென்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!