Latestமலேசியா

16 ஆண்டுகளுக்குப் பிறகு மலேசியாவுக்கு வரும் மென்செஸ்டர் யுனைடெட் – பிரதமர் அன்வார் மகிழ்ச்சி

கோலாலம்பூர், ஏப் 8 – 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மலேசியாவிற்கு Manchester United காற்பந்து  Club 

வருகை தரவிருப்பது பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் கவனத்தை இன்று ஈர்த்தது. 

13 முறை இங்கிலீஷ் பிரீமியர் லீக் (English Premier League) சாம்பியன் பட்டத்தை வென்ற  அந்த கிளப்பின் ரசிகராக அன்வார் திகழ்கிறார்.   

மே 28 ஆம் தேதியன்று புக்கிட்  ஜாலில்  தேசிய  விளையாட்டரங்கில்  ASEAN All-Stars  அணிக்கு எதிரான போட்டி குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த கிளப்பின் அதிகாரப்பூர்வ பதிவைப் அன்வார் பகிர்ந்தார்.

அனைத்து  ஆசியான் நாடுகளும்  Manchester United  குழுவுக்கு  எதிராக ஒரு அணியாக இறங்குகின்றன #ASEAN2025 #GGMU,” என்று அவர் Manchester United   பாடலான Glory Glory Man Unitedடுடன்   எழுதி பகிர்ந்துள்ளார். 

ஆகக் கடைசியாக  2009 ஆம் ஆண்டு மலேசியாவில்   Manchester   United   கிளப் விளையாடியது. 2009 ஆம் ஆண்டு , ஜூலை 18 மற்றும் ஜூலை 20 ஆகிய தேதிகளில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கில் மலேசியா அணியை 3 – 2 மற்றும் 2 – 0 என்ற கோல் கணக்கில்  அந்த கிளப் வீழ்த்தியது.  

மே 30ஆம் தேதியன்று  Hong Kong  மைதானத்தில் ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியிலும்  Manchester  United   பங்கேற்கும் .

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!