Latestமலேசியா

16 மணி நேரம் 45 நிமிடங்களுக்கு வாராந்திர உள்ளூர் பாடல்களின் ஒளிபரப்பு; நவம்பர் 1ஆம் திகதி முதல் மின்னல் FM-யில் மலரும்

கோலாலம்பூர், செப்டம்பர் 4 – நவம்பர் 1ஆம் திகதி முதல், மலேசிய வானொலி நிறுவனமான மின்னல் FM-யில் உள்ளூர் தமிழ் பாடல்களின் ஒளிபரப்பு நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மலேசிய இந்திய ரெக்கார்டிங் கலைஞர்களின் சங்கம் எனும் MINDRA-வின் முயற்சியில், மின்னல் FM-யில் 450 நிமிடங்கள் ஒளிபரப்பாகி வந்த உள்ளூர் பாடல்கள் தற்போது வாராந்திர ஒளிபரப்பாக 1005 நிமிடங்களாக ஒளிபரப்பாகவுள்ளது.

இதன்படி, உள்ளூர் தமிழ் பாடல்களின் கூடுதல் ஒளிபரப்பு நேரம் 9 மணி நேரம் 15 நிமிடங்களுக்கு சமம் என அதன் உறுப்பினர் Gautan Mathan கூறினார்.

இந்த நேர அதிகரிப்பு, மலேசிய இசை கலைஞர்களுக்குப் புதிய உத்வேகமாக அமையும் எனவும் அவர் கூறினார்.

இசைத் துறையில் கால்பதிக்கும் மலேசியார்களுக்கு அங்கிகாரம் வழங்கும் வகையில் மட்டுமின்றி, கலைஞர்கள் தரமான இசையை வழங்குவதற்கும் இது வழிவகுக்கும் என்று மலேசிய இந்திய ரெக்கார்டிங் கலைஞர்களின் சங்கத்தின் தலைவர் சிவக்குமார் முனியன் நம்பிக்கை தெரிவித்தார்.

வருகின்ற நவம்பர் 1ஆம் திகதி முதல், அதிக நேரம் ஒளிபரப்பாகும் உள்ளூர் பாடல்களை அனைவரும் கேட்டு மகிழுமாறு இச்சக்கத்தினர் கேட்டுக் கொண்டனர்.

இதனிடையே, இசை கலைஞர்கள் பலரை MINDRA சங்கத்தில் இணையுமாறு அச்சக்கத்தின் தலைவர் சிவக்குமார் கேட்டுக்கொண்டார். இதன்வழி, இசை துறையில் பல வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் எனும் நிலையில் இது குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்ள MINDRA அகப்பக்கத்தில் வலம் வரலாம் என்றார், அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!