
புத்ராஜெயா, அக்டோபர் -28,
16 வயதுக்குக் குறைவானவர்களுக்கு விவேகக் கைப்பேசிப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வாட்சப்பில் பரவி வரும் ஆவணம் பொய்யானது என, பிரதமர் துறை தெளிவுப்படுத்தியுள்ளது.
அக்டோபர் 20 தேதியிட்ட அந்த போலி ஆவணத்தில், 2026 ஜனவரி 1 முதல் 16 வயதுக்குட்பட்டோர் விவேகக் கைப்பேசி வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது தடைசெய்யப்படும், விதிமுறையை மீறினால் RM5,000 அபராதம் அல்லது சமூகப்பணி செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.
அதனைத் திட்டவட்டமாக மறுத்த பிரதமர் துறை, அத்தகைய அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றது.
எனவே, தகவலை சரிபார்க்காமல் இதுபோன்ற வதந்திகளைப் பகிர்வது சட்டரீதியாக நடவடிக்கைக்கு உட்படும் என்றும் அது எச்சரித்தது.
சக மாணவரை கொன்றது, கற்பழித்தது என பள்ளி மாணவர்களை உட்படுத்திய வன்முறை சம்பவங்கள் அண்மையக் காலமாக அதிகரித்து வருகின்றன; எனவே அவற்றுக்கெல்லாம் பெரியத் தாக்கமாக விளங்குதாகக் கூறப்படும் விவேகப் கைப்பேசியை 16 வயதுக்குக்கு கீழ்பட்டவர்கள் பயன்படுத்தத் தடை விதிப்பது குறித்து ஆராயப்படும் என அரசாங்கம் அண்மையில் கூறியிருந்தது.
அது வெறும் பரிந்துரை கட்டத்தில் தான் உள்ளது.
இந்நிலையில் வாட்சப்பில அந்த பொய்ச் செய்தி பவி, தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தியது.



