Latestமலேசியா

16 வயது குறைந்தோருக்கு இணைய பயன்பாட்டை கட்டுப்படுத்தும் மலேசிய அரசு

கோலாலம்பூர், டிசம்பர் 4 – சிறுவர்கள் இணையத்தை நன்முறையில் பயன்படுத்துவதை உறுதிச் செய்யும் வகையில், 16 வயதிற்கு கீழுள்ளவர்கள் இணைய தளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கியுள்ள தென்று தகவல் தொடர்பு அமைச்சர் Datuk Fahmi Fadzil தெரிவித்தார்.

இதன் வாயிலாக சிறுவர்கள் மற்றும் 18 வயதிற்கு குறைவான பயனர்களுக்கான உள்ளடக்கம் வயதுக்கு ஏற்ப ஒழுங்கு செய்யப்படும் என்றும் கூறப்பட்டது.

சமூக ஊடக தளங்கள், பயனர்களின் வயது சரிபார்ப்பு, பெற்றோர் கட்டுப்பாடு மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் அமைப்புகளை கட்டாயம் வழங்க வேண்டும். மேலும், தங்களின் இணைய பாதுகாப்பு திட்டங்களை அரசுக்கு சமர்ப்பித்து விதிகளைப் பின்பற்றுவதை நிரூபிக்க வேண்டும்.

கடந்த 2022 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரை, குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் 1,521 உள்ளடக்கங்களில் 96 விழுக்காடு அகற்றப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!