16 வருடங்களுக்குப் பின் தீர்க்கப்பட்ட காதலி காணாமல் போன வழக்கு, வீட்டில் சிமெண்ட் போட்டு மறைக்கப்பட்ட உடல் கண்டெடுப்பு
தென் கொரியா, செப்டம்பர் 25 – தென் கொரியாவில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, காணாமல் போன பெண் ஒருவரின் வழக்கு தீர்க்கப்பட்டிருக்கிறது.
காதலனே காதலியை கொன்று வீட்டு பெல்கனியில் சிமெண்ட் போட்டு மூடி மறைத்த கொடூரம் தற்போது அம்பலமான நிலையில் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான் தற்போது 50 வயதாகும் அந்த காதலன்.
கடந்த 2008ஆம் ஆண்டில் தனது குடியிருப்பில் ஏற்பட்ட வாக்கு வாதத்தின் போது, அப்போது 34 வயதான அந்த ஆடவன், அவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் காதலியை ஒரு மழுங்கியப் பொருளால் தாக்கியதில் அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
பின்னர் தனது வீட்டின் பெல்கனியில், செங்கற்கள் கொண்டு மற்றும் 10 சென்டிமீட்டர் வரை தடிமனாக சிமென்ட் பூசி, அந்தப் பெண்ணின் உடலை ஒரு சூட்கேசில் வைத்து புதைத்திருக்கிறான்.
இத்தனை ஆண்டுகளாக யாருக்கும் தெரியாத இருந்த இந்தக் கொலை சம்பவம், கடந்த மாதம் வீட்டு பராமரிப்புப் பணிகளுக்காகச் சென்ற பணியாளரின் மூலம் அம்பலமானது.
இத்தனை ஆண்டுகாலம் ஆகியும் உடலுக்கு மிகுந்த சேதாரம் ஏற்படாததால், கைரேகை ஆகியவை காணாமல்போன பெண்ணின் உடல் என ஆய்வின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி விரைந்து நடவடிக்கை எடுத்து அவ்வாடவனை கைது செய்துள்ளனர்.