Latestமலேசியா

166.49 மீட்டர் நீள கூரை: UniSon-னுக்கு மலேசிய சாதனைப் புத்தகப் புத்தக அங்கீகாரம்

ரவாங், ஜனவரி-6,

சிலாங்கூர், ரவாங்கில் அமைந்துள்ள UniSon எனப்படும் United Season Sdn Bhd நிறுவனம், 166. 49 மீட்டர் நீளமுள்ள கூரைப் பலகைகளை நிறுவி, மலேசிய சாதனைப் புத்தக அங்கீகாரத்தை பெற்றுள்ளது.

நிறம் பூசப்பட்ட COLORBOND எஃகினால் இக்கூரைப் பலகைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.

இச்சாதனை, சிலாங்கூரில் உள்ள YLL Suply Chain Hub வளாகத்தில் நிறுவப்பட்ட KAWA KZ400 Standing Seam Roofing System மூலம் நிகழ்த்தப்பட்டது.

மலேசிய சாதனை புத்தக சான்றிதழ் வழங்கப்பட்ட நிகழ்வில் பேசிய UniSon நிர்வாக இயக்குநர் P. தனபாலன், நாட்டு கட்டுமானத் துறையில் தொழில்நுட்ப திறன், புத்தாக்கம் மற்றும் நிறுவனங்களுக்கிடையேயான வலுவான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாக தெரிவித்தார்.

இது வெறும் சாதனை அளவிலான நீளத்தை மட்டும் சார்ந்ததல்ல; மாறாக, அது நிறுவப்பட்ட விதம் மூலமாகவும் தனித்துவம் பெறுவதாக தனபாலன் சொன்னார்.

கூரைப் பலகைகள், கூரையின் மட்டத்திலேயே roll-forming முறையில் உருவாக்கப்பட்டதால், அதிக துல்லியம், செயல்திறன் மற்றும் பிடிமான தரம் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம், பொருட்களை கையாளும் போது ஏற்படும் சேத அபாயமும் குறைந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், இந்த நடைமுறை, இந்தத் திட்டத்தின் வெற்றிக்குப் பின்னுள்ள வலுவான தொழில்நுட்ப திறனையும்
நிறுவனங்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பையும் பிரதிபலிப்பதாக, UniSon திட்ட தலைமை நிர்வாகி Zaidi Semail கூறினார்.

இந்த சாதனையை அடிப்படையாகக் கொண்டு, UniSon நிறுவனம் மலேசியா முழுவதும் அதிகரித்து வரும் சிக்கலான கட்டடக் கலை மற்றும் தொழில்துறை வளர்ச்சித் திட்டங்களுக்கு மேம்பட்ட கூரைத் தீர்வுகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!