குபாங் பாசு, டிச 4 – மலேசிய குடிமக்களுக்கு சொந்தமான 17 மில்லியன் MyKad தரவுகள் கசிந்து கள்ளச் சந்தையில் விற்கப்பட்டதாக சமூக வலைத்தலைத்தில் வெளியான தகவலை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுஷன் இஸ்மாயில் சாடியுள்ளார்.
NRD எனப்படும் தேசியப் பதிவுத் துறை உள்ளிட்ட பாதுகாப்பு நிறுவனங்கள் நடத்திய முழுமையான சோதனையில் அந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று முடிவு செய்ததாக அவர் கூறினார். தரவுகளின் பாதுகாப்பை குறிப்பாக அனைத்து மலேசியர்களுக்கு சொந்தாமான MyKad தகவல்களுக்கு
அரசாங்கம் உத்தரவாதம் அளிக்கிறது என அவர் வலியுறுத்தினார்.
அரசாங்கத்தின் தகவல் தொழிற்நுட்பத்திற்கு பாதுகாப்பாக இருக்கும் தேசிய பதிவுத் துறை மற்றும் Nacsa எனப்படும் தேசிய சைபர் பாதுகாப்பு நிறுபவனத்துடன் நான் உடனடியாக சரிபார்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டேன். அந்த இரு நிறுவனங்களும் தரவுகள் கசியவில்லை என்பதை உறுதிப்படுத்தியதாக சைபுடின் தெரிவித்தார்.
இதனிடையே உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களைப் பெறும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். சில MyKad கார்டுகளைக் காட்டி 17 மில்லியன் பேரின் MyKad தரவுகள் கசிந்திருப்பதாகக்கூறி தவறான தகவல்களைப் பரப்புவது எளிது. இந்த விவகாரம் உடனடியாக நிறுத்தப்படும் என்று நம்புவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.