Latestமலேசியா

18 ஆண்டுகளுக்கு முன் திருடு போன மோட்டார் சைக்கிள் செகாமாட்டில் கண்டெடுப்பு

செகாமாட், அக்டோபர்-16, ஜோகூர், கோத்தா திங்கி, செடிலியில் (Sedili) 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருடு போன ஒரு மோட்டார் சைக்கிள், செகாமாட் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது அந்த Honda Wave 100 ரக மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் கண்டதாக, செகாமாட் போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன்ட் அஹ்மாட் சாம்ரி மரின்சா (Ahmad Zamry Marinsah) தெரிவித்தார்.

இதையடுத்து 38 வயது இந்தியப் பிரஜையான சந்தேக நபர் கைதானார்.

மோட்டார் சைக்கிள் கண்டெடுக்கப்பட்ட Balai Barang அருகே அந்நபர் கைதுச் செய்யப்பட்டார்.

சந்தேக நபர் தனி ஆளாக அத்திருட்டில் ஈடுபட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இந்நிலையில் 2006-ஆம் ஆண்ட கோத்தா திங்கியில் காணாமல் போன அந்த மோட்டார் சைக்கிள் செகாமாட் வந்தது எப்படி என்பது குறித்தும் போலீஸ் விசாரித்து வருகிறது.

போலி பதிவு எண் பட்டை பயன்படுத்தப்பட்ட சாத்தியம் குறித்தும், கோத்தா திங்கி போலீசுடன் இணைந்து விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!