சியோல், டிசம்பர்-29 – 181 பேருடன் சென்ற தென் கொரிய விமானம், அந்நாட்டின் தென்மேற்கில் உள்ள மூவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது வெடித்துச் சிதறியது.
175 பயணிகள் மற்றும் 6 விமானப் பணியாளர்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தீயில் கிட்டத்தட்ட முற்றாக அழிந்த விமானத்திலிருந்து இருவரைக் காப்பாற்றியதாக, தீயணைப்பு மீட்புக் குழுவினர் கூறினர்.
எனினும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கைக் குறித்து உறுதியான தகவல் இல்லை.
Jeju Air விமான நிறுவனத்திற்குச் சொந்தமான அவ்விமானம், சம்பவத்தின் போது தாய்லாந்திலிருந்து வந்து கொண்டிருந்தது.
தரையிறங்கும் முன்பாக பறவைகளுடன் மோதியதால், விமானத்தின் கியரில் ஏற்பட்ட கோளாறே விபத்துக்குக் காரணமென தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அது உண்மை தானா என்பதை விசாரித்து வருவதாக Jeju Air பேச்சாளர் சொன்னார்.
இந்நிலையில், மீட்புப் பணிகள் துரிதப்படுத்துமாறு அந்நாட்டின் இடைக்கால அதிபர் உத்தரவிட்டுள்ளார்.