கோலாலம்பூர், நவ 22 – மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் பயிற்சியாளர் ஒருவர் அந்த பல்கலைக்கழகத்தின் 19 வயது மாணவருக்கு விலா எலும்பு மற்றும் முதுகெலும்பில் முறிவு ஏற்படும் அளவுக்கு spike bootஸினால் மிதித்ததாக குற்றச்சாட்டப்பட்டது.
நீதிபதி நுரெலினா ஹனிம் ( Noorelynna Hanim) முன்னிலையில் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை 22 வயதுடைய முகமட் அடில் மாட் ( Mohd Adil Mat) மறுத்தார். முதலாம் ஆண்டு பயிற்சி மாணவரை வயிற்றில் spike bootஸில் மிதித்ததால் அவர் காயம் அடைந்ததாக குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த அக்டோபர் 21 ஆம் தேதி இரவு மணி 10.45 அளவில் மலேசிய தேசிய தற்காப்பு பல்கலைக்கழகத்தின் ALK மைதானத்தில் முகமட் அடில் மாட் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது. அவருக்கு 5,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது. முகமட் அடில் மாட்டிற்கு எதிரான இந்த குற்றச்சாடு அடுத்து ஆண்டு பிப்ரவரி 10 ஆம் தேதி மீண்டும் மறுவாசிப்புக்கு செவிமடுக்கப்படும்.