Latestமலேசியா

190 மாணவர்கள் பங்கேற்ற ‘Young Warriors’ சதுரங்க சாம்பியன் 2026

சிரம்பான், ஜனவரி-27 – Young Warriors Rapid Chess Championship 2026 சதுரங்க போட்டி, ஜனவரி 24-ஆம் தேதி சிரம்பான் Taman Tunku Jaafar 2 தேசியப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது.

IQ Chess Training Center ஏற்பாடு செய்த இந்த நிகழ்வில், தேசியப் பள்ளியோடு, தமிழ் – சீனப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 190 மாணவர்கள் பங்கேற்றனர்.

12 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் பிரிவுகளில், 20 நிமிட நேரக் கட்டுப்பாட்டுடன் போட்டிகள் நடைபெற்றன.

ஒவ்வொரு போட்டியாளருக்கும் PAJSK மாநில சான்றிதழ் வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்றவர்களுக்கு 150 வரை ரொக்கப் பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

U7 முதல் U12 வரை சிறந்த ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கான விருதுகள், மற்றும் சிறந்த பள்ளி விருது 4 பேர் கொண்ட அணிகளுக்காக வழங்கப்பட்டது.

லோபாக் தமிழ்ப் பள்ளியைச் சேர்ந்த 11 வயது பத்ம பிரியா நாயுடு Top 10 வீரர்களில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டி, இளம் சதுரங்க வீரர்களின் திறமையை வெளிப்படுத்தும் மேடையாக அமைந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!