Latestமலேசியா

1MDB தொடர்புடைய ஓவியங்கள்; பிகாசோ படைப்பு உட்பட மலேசியாவுக்கு மீண்டும் கொண்டு வரப்படுகின்றன

கோலாலம்பூர், ஏப்ரல்-1-1MDB ஊழல் விவகாரத்துடன் தொடர்புடைய உயர்மதிப்புள்ள 4 ஓவியங்கள், மலேசியாவுக்கே திரும்ப கொண்டு வரப்படுகின்றன.

உலகப் புகழ்பெற்ற ஓவியர் Pablo Picasso-வின் படைப்பும் அவற்றிலடங்கும்.

Joan Miró, Balthus மற்றும் Maurice Utrillo போன்ற பிரபல ஓவியர்களின் படைப்புகளும் அதில் அடங்குகின்றன.

இந்த ஓவியங்கள் மலேசியா கொண்டு வரப்பட்டு, விரைவில் புத்ராஜெயா MACC தலைமையகம் வந்தடையும் என, அந்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கூறியது.

இந்த ஓவியங்கள், 1MDB வழக்கின் சாட்சியான Jasmine Loo வாங்கிய சொத்துகளாகக் கூறப்படுகின்றன.

அவை, தவறாக பயன்படுத்தப்பட்ட நிதியுடன் தொடர்புடையதாக அமெரிக்க நீதித் துறையால், அடையாளம் காணப்பட்டுள்ளன.

இந்த சொத்துகளை மீட்டுக் கொண்டு வருவது, MACC, அமெரிக்க மத்தியப் புலனாய்வுத் துறையான FBI மற்றும் அமெரிக்க அதிகாரிகளின் ஒத்துழைப்பின் மூலம் நடைபெறுகிறது.

மீட்டெடுக்கப்பட்ட இந்த ஓவியங்கள், பொது மக்களுக்கு காட்சிப்படுத்தப்படலாம் என்றும், பின்னர் ஏலத்தில் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!