Latestமலேசியா

2ஆவது 5G அலைக்கற்றை செயல்படுத்த U Mobile Sdn Bhd தேர்வு இறுதியானது – பாமி பாட்ஷில் திட்டவட்டம்

புத்ரா ஜெயா, நவ 8 – நாட்டின் இரண்டாவது 5G அலைக்கற்றை செயல்படுத்துவதற்கு U Mobile Sdn Bhd- இன் தேர்வு இறுதியானது என்பதோடு இது குறித்து மறுபரிசீலனை செய்யப்படாது என அரசாங்கப் பேச்சாளர் பாமி பாட்ஷில் (Fahmi Fadzil) தெரிவித்திருக்கிறார். இரண்டாவது 5G அலைக்கற்றை வெளியிடுவதற்கு மொபைல் நெட்வொர்க் நிறுவனத்தை தேர்ந்தெடுப்பதில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையத்திற்கு எந்த நெருக்குதலும் அளிக்கப்படவில்லையென தகவல் தொடர்பு அமைச்சருமான பாமி தெரிவித்தார். MCMC இன் கீழ் உள்ள ஒரு சுயேட்சையான தொழில்நுட்ப குழு ஏலதாரர்களை சரிபார்த்து, U மொபைலை ஏகமனதாக தேர்வு செய்ததாக அவர் மீண்டும் வலியுறுத்தினார். நிர்வாகி இதில் சம்பந்தப்படவில்லை. எங்கள் தரப்பில் எந்த தலையீடும் இல்லையென இன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பாமி தெரிவித்தார்.

இந்த முடிவு தொடர்பான கூடுதல் விவரங்களை நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தாம் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகவும் எனினும் சில விவரங்களை பொதுவில் வெளியிட முடியாது என அவர் கூறினார். தனது திட்டங்கள் மற்றும் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து முதலில் U Mobile நிறுவனத்துடன் மலேசிய தொடர்பு பல்லூடக ஆணையமான MCMC கலந்துரையாடல் நடத்த வேண்டியுள்ளது. முதலில் அந்த கூட்டம் நடைபெறுவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். அந்த கூட்டத்திற்குப் பின் எங்களுக்கு மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் நாங்கள் பகிர்ந்துகொள்வோம் என பாமி தெரிவித்தார். இரண்டாவது 5G அலைக்கற்று அரசாங்க ஒப்பந்தமோ அல்லது உரிமமோ அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!