
பெய்ஜிங், டிசம்பர்-28 – சீனாவில் maglev அதாவது காந்தத்தில் மிதக்கும் இரயில், உலக இரயில் துறையில் புதியச் சாதனையைப் பதிவுச் செய்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் சோதனை ஓட்டமாக, 2 வினாடிகளில் மணிக்கு 700 கிலோ மீட்டர் வேகமாக இரயிலைச் செலுத்தியுள்ளனர்.
இது, நீங்கள் அதை உணரும் முன்பே அது மிக விரைவாக மறைந்துவிடும் அளவுக்குரிய வேகமாகும்.
இரயில் வெள்ளி மின்னல் போல் அதிவேகமாக கடந்து செல்வதை, சோதனை வீடியோவில் பார்க்க முடிந்தது.
வெறும் கண்களால் பின்தொடர முடியாத அளவுக்கு வேகமாக, மெல்லிய மூடுபனிப் பாதையை அது விட்டுச் செல்வது, பார்ப்பதற்கு இது ஓர் அறிவியல் புனைகதை திரைப்படத்தின் காட்சி போல் உள்ளது.
இந்த இரயில் காந்த விசையைப் பயன்படுத்தி தண்டவாளத்தைத் தொடாமலேயே காற்றில் மிதந்தபடி சீறிப்பாய்கிறது.
இரயிலின் அதிவேகத்தைப் பார்த்த ஊடகவியலாளர்களே ஆச்சரியத்தில் வாய்பிளந்தனர்.
அந்த அதிவேகத்தை அடைந்த பிறகு இரயில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.
இதன் வழி, இதுவரை இருந்ததிலேயே வேகமான சூப்பர் கொண்டக்டர் மின்சார maglev இரயிலாக அது மாறியது.
இந்த ஆராய்ச்சி சாதனை, எதிர்காலத்தில் மிக உயர்தரம் கொண்ட பரிமாற்ற மற்றும் வேகப் பயணத்திற்கான புதிய வாய்ப்புகளை திறக்கக் கூடும் என வல்லுநர்கள் கூறுகின்றனர்.



