
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14 – வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான e-PLKS எனப்படும் தற்காலிக வேலை அனுமதி பெர்மிட்டுகளை மாற்றியமைத்து அச்சிட்டு வந்த மோசடி கும்பலை, குடிநுழைவுத் துறை முறியடித்துள்ளது.
கோலாலம்பூர், தாமான் மலூரியில் 4 கடைகளில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் அக்கும்பல் சிக்கியது.
இதையடுத்து 16 வங்காளதேச ஆடவர்களும் 3 மியன்மார் ஆடவர்களும் கைதாகினர்.
விசாரணைக்கு வருமாறு ஓர் உள்ளூர் ஆடவர், 4 பெண்கள் மற்றும் ஒரு வங்காளதேச ஆடவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
ரொக்கப் பணம், அச்சிடப்பட்ட e-PLKS மின்னியல் சீட்டுகள், வங்காளதேச கடப்பிதழ்கள், மடிக்கணினிகள், அச்சு இயந்திரங்கள், CCTV கேமராக்கள் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
அந்தச் சட்டவிரோத செயல்கள் அதிகாரிகள் கண்களில் படாத வண்ணம், கைப்பேசி பழுதுபார்ப்பு மற்றும் மளிகைக் கடைகள் போர்வையில் அக்கும்பல் இயங்கி வந்துள்ளது.
வெளிநாட்டினரின் போலி கடப்பிதழ்களுக்கு ஏற்ப e-PLKS மின்னியல் சீட்டை மாற்றியமைக்க தலா 100 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படுவதும் விசாரணையில் கண்டறியப்பட்டது.