
இஸ்தான்புல், நவம்பர்-12 – துருக்கியே இராணுவத்துக்குச் சொந்தமான சரக்கு விமானமொன்று 20 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் விழுந்து நொறுங்கியது.
Azerbaijan நாட்டிலிருந்து திரும்பும் வழியில் Georgia எல்லையில் அது விபத்துக்குள்ளானதாக துருக்கியே தற்காப்பு அமைச்சு கூறியது.
முன்னதாக Georgia வான்பகுதியில் நுழைந்த சில நிமிடங்களிலேயே, எந்தவோர் அவசர சமிக்ஞையையும் அனுப்பாமல் விமானம் ராடார் கண்காணிப்பிலிருந்து காணாமல் போனது.
யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை எனக் கூறப்படும் நிலையில், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
விபத்துக்கான காரணமும் கண்டறியப்பட்டு வருகிறது.
அடர்த்தியான வெள்ளைப் புகையுடன் விமானம் வானில் சுழன்று சுழன்று விழுந்து நொறுங்கிய வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.



