
நியூ யோர்க், மார்ச்-1 – இணையம் வாயிலான தொலைப்பேசி மற்றும் வீடியோ சேவையான Skype மூடப்படுவதாக, மைக்ரோசோஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.
வரும் மே மாதம் தொடங்கி அது பயன்பாட்டில் இருக்காது.
இந்நிலையில் தங்களின் log-in தகவல்களைப் பயனர்கள் Microsoft Teams செயலியில் பயன்படுத்த முடியுமென X தளம் வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Skype-யை 8.5 பில்லியன் டாலரை ரொக்கமாகக் கொடுத்து வாங்கிய 14 ஆண்டுகளுக்குப் பிறகு மைக்ரோசோஃப்ட் மூடுகிறது.
ஈராயிரத்தாம் ஆண்டுகளின் மத்தியில் முக்கியத் தொடர்பு முறையாக இருந்தது இந்த Skype செயலியாகும்.
எனினும், அண்மைய ஆண்டுகளில் அதன் பிரபலம் மெல்ல சரியத் தொடங்கியது.
கோவிட்-19 பெருந்தொற்றினால் உலகமே முடங்கிய போது, தனது நேரெதிர் போட்டி செயலிகளான Zoom, Google Meet, Cisco Webex உள்ளிட்டவை படு பிரபலம் அடைந்தாலும், Skype தொடர்ந்து பின் தங்கியது.
கடந்த 15 ஆண்டுகளாக Apple நிறுவனத்தின் FaceTime, Meta-வின் WhatsApp போன்றவற்றின் வருகையாலும் Skype கடும் சவாலை எதிர்நோக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.