ஜியோர்ஜ்டவுன், செப்டம்பர்-9 – RSN ராயர் தலைமையிலான பினாங்கு இந்து அறப்பணி வாரியம் (PHEB), 2023 STPM தேர்வில் மிகச் சிறந்த முறையில் தேர்ச்சிப் பெற்ற இந்து மாணவர்களுக்கு ரொக்க வெகுமதிகளை வழங்கியுள்ளது.
3.5 CGPA pointer மற்றும் அதற்கும் மேல் பெற்ற 22 மாணவர்களுக்கு தலா 500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அதே சமயம் 4A அல்லது 4 flat புள்ளிகளை எடுத்த 3 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு 2023-ஆம் ஆண்டுக்கான மிகச் சிறந்த STPM இந்து மாணவர் விருதும் வழங்கப்பட்டதாக ராயர் தெரிவித்தார்.
பினாங்கு முன்னாள் முதல் அமைச்சர் லிம் குவான் எங் தலைமைத் தாங்கி சிறப்பித்த அந்நிகழ்வில், மேற்கண்ட மாணவர்களுக்கு ஆளுக்கொரு மடிக்கணினியோடு, அறப்பணி வாரியத்தின் பதக்கமும் வழங்கப்பட்டது.
அரசாங்க, தனியார் உயர் கல்விக் கூட மாணவர்கள் 61 பேருக்கு நிதியுதவியும் ஒப்படைக்கப்பட்டது.
சான்றிதழ் படிப்புக்கு தலா 500 ரிங்கிட்டும், டிப்ளோமா படிப்புக்கு 800 ரிங்கிட்டும், இளங்கலைப் பட்டப் படிப்புக்கு 1,000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டன.
சபா, சரவாக்கில் பயிலும் 4 மாணவர்களுக்கு, விமானப் பயணச் செலவுக்காக கூடுதலாக 500 ரிங்கிட் என மொத்தம் 1,500 ரிங்கிட் வழங்கப்பட்டது.
Penisular பல்கலைக் கழகத்தில் இடம் கிடைத்த 2 மாணவர்களிடம், இந்து அறப்பணி வாரியத்தின் கல்வி உபகாரச் சம்பளத்தின் ஒரு பகுதியாக, தலா 500 ரிங்கிட் பதிவுக் கட்டணத் தொகையும் சேர்ப்பிக்கப்பட்டது.
சமூக நல உதவி கேட்டு விண்ணப்பித்திருந்த ஐவருக்கு தலா 1,000 ரிங்கிட் வழங்கப்பட்டது.
அந்நிகழ்வில் இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் Dr லிங்கேஸ்வரன் அருணாசலம், பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் குமரன் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.