மெக்சிக்கோ சிட்டி நவ 18 – மெக்சிக்கோ சிட்டியில் நடைபெற்ற 73ஆவது பிரபஞ்ச அழகிப் போட்டியில் டென்மார்க் அழகி விக்டோரியா கிஜெர் தெவ்லிக் (Victoria Kjaer Theilvig ) வெற்றி பெற்றார். இதன்வழி பிரபஞ்ச அழகிப் பட்டத்தை வென்ற முதல் டென்மார்க் அழகி என்ற பெருமையை 21 வயதுடைய விக்டோரியா பெற்றுள்ளார். கடந்த 2023 ஆம்ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற நிகராகுவாவின் ஷெய்ஸ் பலாசியோஸ்
( Sheynnis Palacios ) இவ்வாண்டு வெற்றி பெற்ற விக்டோரியாவிற்கு பிரபஞ்ச அழகிப் பட்டம் சூட்டினார். போட்டி நடனக் கலைஞர், தொழில்முனைவோர் மற்றும் வழக்கறிஞராக வரும் ஆர்வத்தை கொண்டுள்ள விக்டோரியா இப்போட்டியில் 120க்கும் மேற்பட்ட போட்டியாளர்களை தோற்கடித்தார்.