Latestமலேசியா

2024-ஆம் ஆண்டுக்கான e-Filing வருமான வரி கணக்குத் தாக்கல் இன்று தொடங்குகிறது

புத்ராஜெயா, மார்ச்-1 – தனிநபர் மற்றும் தனிநபர் அல்லாத வரி செலுத்துநர்கள், 2024-ஆம் ஆண்டுக்கான தங்களின் வருமான வரி கணக்கை, இன்று மார்ச் 1 முதல் e-Filing வாயிலாகத் தாக்கல் செய்யலாம்.

உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN அதனை அறிவித்துள்ளது.

MyTax அல்லது LHDN இணைய அகப்பக்கத்தில் இந்த e-Filing முறையைப் பயன்படுத்துமாறு அது வரி செலுத்துநர்களைக் கேட்டுக் கொண்டது.

அதே சமயம், வரி முகவர்கள், அதே MyTax அகப்பக்கத்தில் Tax Agent e-Filing System அல்லது TAef தளத்தைப் பயன்படுத்த வேண்டும்.

வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யும் முன் தேவையான அனைத்து ஆவணங்களும் கைவசம் இருப்பதை வரி செலுத்துநர்கள் உறுதிச் செய்துகொள்ள வேண்டும்.

வருமான அறிக்கை, இரசீதுகள், Invoice எனப்படும் விலைப்பட்டியல் உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.

கடவுச் சொல்லை மறந்தவர்கள் MyTax அகப்பக்கத்தில் அதனை மீண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் LHDN தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!