Latestமலேசியா

2024 ஆம் ஆண்டு முதல் புக்காவ் மோசடி திட்டம் அதிகரிப்பு

கோலாலம்பூர், மார்ச்-31- கடந்த ஆண்டு, 1.35 மில்லியன் ரிங்கிட் இழப்புகளை உள்ளடக்கிய, புக்காவ் தொடர்பான மொத்தம் 41 மோசடி சம்பவங்களை வர்த்தக குற்றப் புலனாய்வுத்துறையால் விசாரிக்கப்பட்டன.

கடந்த 2024-ஆம் ஆண்டில் இந்த மோசடி சம்பவங்களினால் ஏற்பட்ட இழப்புகள் 542,950-ரிங்கிட்டை எட்டியிருந்த நிலையில், கடந்த ஆண்டு 11 சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்த மோசடி சம்பவங்களினால் பணத்தை பறிகொடுத்து ஏமாறும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் மட்டும் RM684,653 ரிங்கிட் இழப்புகளுடன் ஏழு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப் பிரிவின் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குநர் கமிஷனர் ருஸ்டி முகமட் இசா (Rusdi Mohd Isa )கூறினார்.

2024-ஆம் ஆண்டில் இதுபோன்ற மோசடி தொடர்பாக 9 சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதோடு கடந்த ஆண்டு எழுவர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த மோசடி குறித்து பொதுமக்கள், குறிப்பாக ஓய்வுபெற்றவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், விழிப்புடன் இருக்குமாறும், முன்பின் தெரியாதவர்களை எளிதில் நம்ப வேண்டாம் என்றும் ருஸ்டி வலியுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!