
கோலாலம்பூர், ஏப் 17 – 2024 எஸ்.பி.எம் தேர்வு முடிவு எதிர்வரும் வியாழக்கிழமை ஏப்ரல் 24 ஆம்தேதி வெளிவரும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வில் நாடு முழுவதிலும் 3,337 தேர்வு மையங்களில் 402,956 பேர் அமர்ந்தனர்.
பள்ளி மாணவர்கள் தங்களது எஸ்.பி.எம் தேர்வு முடிவை வியாழக்கிழமை காலை 10.00 மணி முதல் அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம்.
தனிப்பட்ட முறையில் இத்தேர்வை எழுதியவர்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது தாங்கள் தேர்வுக்கு பதிவு செய்த மாநில கல்வித்துறையுடன் தொடர்பு கொண்டு முடிவுகளை பெற்றுக்கொள்ளலாம் என கல்வி அமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கக்பட்டது.
பள்ளி மாணவர்கள் மற்றும் தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதியோர் myresultspm.moe.gov.my என்ற மின்னஞ்சல் மற்றும் SPM<jarak>NoKP<jarak>AngkaGiliran dan hantar ke 15888 என்ற குறுஞ்செய்தி மூலமாகவும் முடிவை பெறலாம்.