
கோலாலம்பூர், நவம்பர்-21 – கடந்தாண்டு மலேசியாவில் மொத்தம் 190,304 திருமணங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
இது 2023-ஆம் ஆண்டில் பதிவான 188,614 திருமணங்களை விட 0.9% அதிகமாகும்.
மொத்தத் திருமணங்களில் முஸ்லீம் திருமணங்கள் மட்டுமே 72.3% ஆகும்.
அதே சமயம், 2024-ல் 60,457 விவாகரத்துகள் பதிவாகியுள்ளன.
இது 2023-ல் பதிவான 58,095 விவாகரத்துக்களை விட 4.1% உயர்வாகும்.
முஸ்லீம் விவாகரத்துகள் 2023 இல் 44,322 இருந்து 2024-ல் 47,577 ஆக உயர்ந்துள்ளன; இது 7.3% அதிகரிப்பாகும்.
Rujuk அதாவது திரும்ப ஒன்று சேருதல் சம்பவங்கள் 2024-ல் 5,563-ராக பதிவாகின.
முந்தைய ஆண்டோடு ஒப்பிடும்போது இது 4.7% குறைவாகும்.
விவாகரத்து அதிகளவில் 30 முதல் 34 வயதுக்கு இடைப்பட்டவர்களையே உட்படுத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.



