
ஜோர்ஜ் டவுன் , பிப் 5 – பினாங்கு , ஜோர்ஜ் டவுன் , Persiaran Gurneyயில் வர்த்தக வளாகத்தின் மேல் மாடியிலிருந்து கீழ்த்தளத்தில் விழுந்த ஆடவர் ஒருவர் காயம் அடைந்தார்.
இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்த அந்த சம்பவத்தினால் அந்த வர்த்தக தொகுதியில் பொருட்களை வாங்க வந்தவர்களில் பலர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
எனினும் அந்த நபர் எப்படி கீழே விழுந்தார் என்று உடனடியாக தெரியவில்லை. ஆம்புலன்ஸ் வண்டியின் மூலம் அந்நபர் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலானது.