Latestமலேசியா

2024/2025 கல்வியாண்டில் அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் 6,743 பூமி புத்ரா அல்லாத STPM மாணவர்களுக்கு இடம்

எஸ்.டி.பி.எம், மெட்ரிகுலேஷன் மற்றும் ஃபவுண்டேஷன் கல்வியை முடித்த மாணவர்கள் மேற்கல்வியைத் தொடருவதை, உயர் கல்வி அமைச்சு எப்போதும் உறுதிச் செய்து வருகிறது.

அக்கடப்பாட்டிலிருந்து உயர் கல்வி அமைச்சு பின்வாங்காது எனக் கூறிய அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr சாம்ரி அப்துல் காடிர் (Datuk Seri Dr Zambry Abd Kadir), 2024/2025 கல்வியாண்டில் 29,192 STPM மாணவர்களுக்கு அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் இடம் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.

அவர்களில் 22,449 பேர் பூமிபுத்ராக்கள், 6,743 மாணவர்கள் பூமிபுத்ரா அல்லாதவர்கள்.

எனினும், கடந்தாண்டைக் காட்டிலும் அவ்வெண்ணிக்கைக் குறைவே என்பதை அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

2023/2024 கல்வியாண்டில் 21,910 பூமிபுத்ரா மாணவர்களும் 7,623 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களும் அரசாங்க உயர் கல்விக் கூடங்களில் நுழைந்தனர்.

இவ்வேளையில் மெட்ரிகுலேஷன் முடித்த மாணவர்களில் 2,810 பூமிபுத்ரா அல்லாத மாணவர்கள் உட்பட 18,803 மாணவர்கள் புதியக் கல்வியாண்டில் மேற்படிப்பைத் தொடர்ந்துள்ளனர்.

அதே சமயம் ஃபவுண்டேஷன் முடித்தவர்களில் 3,768 பூமிபுத்ரா மாணவர்களும், 50 பூமிபுத்ரா அல்லாத மாணவர்களும் பொது உயர் கல்விக் கழகங்களில் சேர்ந்திருக்கின்றனர்.

மேற்கண்ட அனைவரும் ஒரே மாதிரியான மதிப்பாய்ப்பின் மூலமாகவும் தகுதி அடிப்படையிலும் மேற்கல்வி வாய்ப்பைப் பெற்றதாக, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் Dr சாம்ரி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!