கோலாலம்பூர், அக் 17 – இந்திய சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நாளை தாக்கல் செய்யப்படவிருக்கும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் 500 மில்லியன் ரிங்கிட்டுக்கும் மேலாக அரசாங்கம் ஒதுக்க வேண்டுமென MIPP எனப்படும் மலேசிய இந்தியர் மக்கள் கட்சியின் தலைவர் புனிதன் ( P. Punithan ) கோரிக்கை விடுத்துள்ளார்.
மலேசியாவின் மூன்றாவது மிகப் பெரிய இனமாக இருக்கும் இந்திய சமூகம் இதர சமூகங்களை ஒப்பிடுகையில் அரசாங்கத்தின் குறைந்த ஆதரவையே பெற்றுவருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவான மித்ராவின் கீழ் ஒதுக்கப்பட்ட 100 மில்லியன் ரிங்கிட் போதுமானதாக இல்லை. எனவே 500 மில்லியன் ரிங்கிட்டிற்கும் குறைவான எந்த தொகையும் அர்த்தமுள்ள மாற்றங்களைக் கொண்டு வராது.
மித்ரா ஒரு உருமாற்றப் பிரிவாக அமைக்கப்பட்டுள்ளதால் 100 மில்லியன் ரிங்கிட் சமூக நல சேவைகளை மட்டுமே வழங்க முடியும். இந்திய சமூகத்தை திறம்பட மேம்படுத்துவதற்காக,
3 பில்லியன் ரிங்கிட்க்கும் அதிகமான நேரடி மற்றும் மறைமுக நிதிகளை ஒருங்கிணைக்கும்படி புனிதன் அழைப்பு விடுத்தார்.
அடுத்த ஆண்டுக்கான புதிய வரவு செலவுத் திட்டத்தில் வாக்குறுதிகளை ஒற்றுமை அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் அது இந்திய சமூகத்தின் நம்பிக்கையை மேலும் சிதைத்துவிடும் என FMT இணையத் தள பதிவேட்டிடம் புனிதன் தெரிவித்தார்.