
சுங்கைபட்டாணி மார்ச் 12- இந்த ஆண்டு கொண்டாடப்பட்ட சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் தைப்பூச விழாவினை முன்னிட்டு அதன் மூலம் ,கிடைக்கப்பெற்ற மொத்த வசூல் 514,976.50 என தேவஸ்தான நிர்வாகம் நேற்று செய்தியாளர்களிடம் தெரிவித்தது.
இந்த ஆண்டு தைப்பூச விழாவில் 20,921 பக்தர்கள் பால்குடங்கள் ஏந்தி வந்ததாகவும்,12 இரதக் காவடிகளும்,4,375 அர்ச்சனை சீட்டுகளும்,563 காவடிச் சீட்டுகளும்,2715 முடிக்காணிக்கை சீட்டுகளும் .தகவல் மையத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்கொடை ரி.ம. 14,956 எனவும் அதோடு தனிநபர் நன்கொடைகள், சங்காபிஷேகம் ,பொருள்கள் ஏலம், உபயங்கள் என ஆக மொத்த வசூலாக ரி.ம.514,976.50 கிடக்கபெபெற்றதாக தேவஸ்தானத்தின் பொருளாளார் ந.பத்மநாதன் தெரிவித்தார்.
சுங்கைபட்டாணி ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தானத்தின் 107ஆம் ஆண்டு தைப்பூசம் சிறப்பாக நடைபெற்றதற்கு பொதுமக்களின் ஆதரவு மிகவும் சிறப்பாக அமைந்ததாக தேவஸ்தானத்தின் தலைவர் பெ.இராஜேந்திரன் கூறினார்.
பிரதமரின் அரசியல் செயலாளர் ச்சான் மிங் காய் (Chan Ming Kai), கெடா மாநில மந்திரி பெசார்,மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஓங் சியா சேன் (Wong Chia Zen), கெடா மாநில காவல் துறை அதிகாரிகள், கோல மூடா மாவட்ட காவல் துறையினர், தேவஸ்தானத்தின் அறங்காவலர்கள், நன்கொடையாளர்கள் , உபயக்காரர்கள், தொண்டர்கள் ஆகியோருக்கும் தமது நன்றியினைத் இராஜேந்திரன் தெரிவித்துக் கொண்டார்.