
பட்டவொர்த், செப்டம்பர்-3- பினாங்கில் பட்டவொர்த்தில் முதன் முறையாக உங்களுக்காக வருகிறது 2025 SaReGaMaPa Li’l Champs கலை நிகழ்ச்சி.
PICCA மாநாட்டு மையத்தில் செப்டம்பர் 27-ஆம் தேதி மாலை 6.30 மணி தொடங்கும் இந்நிகழ்ச்சியை, உங்களுக்காகப் பிரத்யேகமாகக் கொண்டு வருவது SAM JEWELLERY SRI TANGGAM.
மலேசியாவின் ஹேமித்ரா உள்ளிட்ட இசை உலகில் ஒரு வளம் வந்துக் கொண்டிருக்கும் இளம் பாடகர்கள் இந்தக் கலை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
கோலாலம்பூருக்கு வெளியே முதன் முறையாக நடைபெறும் இக்கலை நிகழ்ச்சியில் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு, வீடமைப்பு மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான பினாங்கு ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எஸ். சுந்தரராஜூ கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்நிகழ்ச்சி தொடர்பாக நடைப்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார். இதனிடையே, முழு இசைக்குழுவுடன் இந்நிகழ்ச்சி வருகையாளர்களை நிச்சயம் மகிழ்விக்கும் என இதன் முதன்மை ஏற்பாட்டு ஆதரவு நிறுவனமான Tasly Malaysia-வின் நிர்வாக இயக்குநர் டத்தோ Dr ரவீ தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் RM120, RM80 ரிங்கிட் விலையில் விற்கப்படும் நிலையில் GREATTICKET.MY QR குறியீட்டை ஸ்கேன் செய்து டிக்கெட்டை பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இலவச டிக்கெட்டுகளும் உண்டு; அது குறித்த தகவல்களை ஏற்பாட்டாளர்களை தொடர்புகொண்டு கேட்டறியலாம். இந்தக் கலை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் ஊடக ஆதரவாளர் வணக்கம் மலேசியாவாகும்.