Latestமலேசியா

2026 இறுதிக்குள் RON95 மானியம் RM24 பில்லியன் வரை உயரலாம் – பிரதமர் எச்சரிக்கை

கூச்சிங், மார்ச்-14 – ஈரான்-இஸ்ரேல் மோதல் நீடித்தால் RON95 பெட்ரோல் மானியச் செலவு இவ்வாண்டு இறுதிக்குள் RM24 பில்லியன் வரை உயரக்கூடும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எச்சரித்துள்ளார்.

RON95 பெட்ரோல் விலையை லிட்டருக்கு RM1.99 என BUDI95 திட்டத்தின் கீழ் அரசாங்கம் நிலைநிறுத்தியுள்ளது.

ஆனால் ஈரான் மோதலால் உலக எண்ணெய் விலை உயர்ந்து, அரசாங்கத்தின் மாதாந்திரச் செலவு RM700 மில்லியனிலிருந்து RM2 பில்லியனாக உயர்ந்துள்ளது.

மோதல் நீடித்தால், மொத்தச் செலவு RM24 பில்லியன் வரை செல்லும் அபாயம் உள்ளதாக அன்வார் சொன்னார்.

எனவே மேற்காசிய மோதல்கள் சீக்கிரமே முடிவுக்கு வர வேண்டும் என வேண்டிக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

என்றாலும், அதிக விலை மக்களுக்கு சுமையாக அமைந்திடக் கூடாது என்பதற்காக அரசாங்கம் உறுதியாக மானியச் சலுகையைத் தொடரும் என பிரதமர் உத்தரவாதம் அளித்தார்.

அதற்காக மற்றத் துறைகளில் அரசாங்கம் செலவை மிச்சப்படுத்தும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!