செப்பாங், ஜனவரி-6 – 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டின் பிரச்சார இயக்கத்தில் எந்தவொரு மாநிலத்தையும் புறக்கணிக்க வேண்டாமென பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அவ்வியக்கம் அதன் நோக்கத்தை அடைய அனைவரின் பங்கேற்புமும் அவசியமென டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனவே, சுற்றுலா, முதலீடு, பொருளாதாரம் ஆகியத் துறைகளில் மலேசியாவின் ஆற்றலை மேம்படுத்த அனைத்து அமைச்சுகளுக்கும் அவர் உத்தரவிட்டார.
அனைத்துத் தரப்பின் ஒத்துழைப்பும் இருந்தால், 2026-ல் 35.6 மில்லியன் சுற்றுப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் இலக்கு சாத்தியமாகும்;
அதன் மூலம் 147.1 பில்லியன் ரிங்கிட் வருமானத்தை நாடு ஈட்ட முடியுமென பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இதனிடையே, Visit Malaysia 2026 பிரச்சாரத்தின் கீழ் அதிக விமானங்களையும், சர்வதேச பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்தையும் கொண்டிருப்பதாக, இதில் பங்காளித்துவம் வகிக்கும் பாதிக் ஏர்ரின் தலைமை செயல்முறை அதிகாரி சந்திரன் ராம மூர்த்தி இவ்வாறு தெரிவித்தார்.
இந்த 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டானது, மலேசியாவை முதன்மை சுற்றுலாத்தலமாக உருவாக்கும் புதிய அணுகுமுறையாகும்.
அவ்வியக்கம் வெற்றிப் பெற்றால், நாட்டின் சுற்றுலாத் துறையோடு, உணவு மற்றும் பானங்கள் தொழில் உட்பட பல்வேறு தொழில்துறைகள் நன்மைப் பெறும் என்றார் அவர்.
செப்பாங்கில், 2026 மலேசியாவுக்கு வருகைத் தரும் ஆண்டின் பிரச்சார இயக்கத்தைத் தொடக்கி வைத்து உரையாற்றிய போது டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு சொன்னார்.