
கோலாலம்பூர், ஜனவரி-24-“உங்கள் உழைப்பு கவனிக்கப்படவில்லை என்று நினைத்ததுண்டா? இப்போது உங்களை நாடு முழுவதும் பாராட்டும் நேரம் வந்துவிட்டது”
ஆம், மனிதவள அமைச்சு KESUMA நடத்தும் ‘2026 தொழிலாளர் தின விருதுகள்’ விழா மே 1-ஆம் தேதி புக்கிட் ஜாலில் அக்சியாத்தா அரேனா அரங்கில் நடைபெறுகிறது.
Pekerja Kesuma Bangsa என்ற கருப்பொருளில் இந்த பெருமைமிகு நிகழ்வில் 14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படவிருக்கின்றன.
தேசியத் தொழிலாளர் திலகம், சிறந்த முதலாளி, சிறந்த தொழிற்சங்கம், சிறந்த ஊடகம், சிறந்த ஊடகவியலாளர் உள்ளிட்ட விருதுகளும் அவற்றிலடங்கும்.
வெற்றியாளர்களுக்கு RM10,000 ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என அனைவரின் பங்களிப்பும் இவ்விழாவில் அங்கீகரிக்கப்படுகிறது.
பதிவுச் செய்ய கடைசி நாள் மார்ச் 20-ஆம் தேதியாகும்.
இப்போதே விண்ணப்பிக்க www.ahp2026.com.my என்ற இணைய அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.



