Latestமலேசியா

2027 Tabika Perpaduan மாணவர் பதிவு இணையத்தில் தொடங்கியது

புத்ராஜெயா, மார்ச்-17-2027-ஆம் ஆண்டுக்கான Tabika Perpaduan பாலர் பள்ளி மாணவர் பதிவு தற்போது திறக்கப்பட்டுள்ளது.

வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை இணையம் வாயிலாக அதற்கு விண்ணப்பிக்கலாம் என, தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.

4 முதல் 6 வயது கொண்ட மலேசிய குடிமக்களாக இருக்க வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் MyKad வைத்திருக்க வேண்டும் என்பன, மாணவர் பதிவுக்கான நிபந்தனைகளாக வைக்கப்பட்டுள்ளன.

அதோடு, பெற்றோரின் வீடு அல்லது வேலையிடம் Tabika Perpaduan பால் பள்ளியிலிருந்து 10 கிலோ மீட்டர் சுற்றளவில் இருப்பவர்களும் முன்னுரிமை வழங்கப்படும்.

பெற்றோர்கள், பாதுகாவலர்கள் அனைவரும் perpaduan.edu.my இணையத்தளத்தில் பதிவுச் செய்யலாம்.

நாட்டில் தற்போது 1,781 Tabika Perpaduan பாலர் பள்ளிகள் செயல்படுகின்றன; இவற்றில் 34,817 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

குழந்தைகளை முதல் வகுப்பு கல்விக்குத் தயார்படுத்தும் வகையில் இவ்வாண்டு முதல் 2026 பாலர் பள்ளி பாடத்திட்டத்தை Tabika Perpaduan, அறிமுகப்படுத்துகிறது.

இது அறிவாற்றல், உணர்ச்சி, நற்பண்புகள் மற்றும் ஒற்றுமை மதிப்புகளை வலியுறுத்துவதாவும் அமைச்சு கூறிற்று.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!