Latestமலேசியா

2028-க்குள் கிளானா ஜெயா LRT வழித்தடத்துக்கு 26 புதிய இரயில்கள்

கோலாலம்பூர், பிப்ரவரி-28-கிளானா ஜெயா LRT வழித்தடத்துக்கு 2028-ஆம் ஆண்டுக்குள் 26 புதிய இரயில்கள் வழங்கப்படவுள்ளன.

இது பயணிகளின் அனுபவத்தையும் சேவையின் நம்பகத்தன்மையையும் மேம்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது என, போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் கூறினார்.

அடிக்கடி பழுதடையும் பழைய இரயில்களை மாற்றுவதற்காக இப்புதிய இரயில்கள் கொண்டு வரப்படுகின்றன.

இத்திட்டத்திற்கு 2026 பட்ஜெட்டில் RM1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த இரயில்களை தயாரிக்கும் ஒப்பந்தம் சீனாவைச் CRRC நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

முதல் புதிய இரயில் 2028 செப்டம்பர் மாதத்தில் வந்துசேருமென எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற இரயில்கள் பின்னர் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.

கிள்ளான் பள்ளத்தாக்கின் மிகவும் பரபரப்பான LRT வழித்தடங்களில் ஒன்றான கிளானா ஜெயா பாதையின் சேவையை மேம்படுத்த இது உதவும் என்று அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இப்புதிய இரயில்கள் தாமதங்களை குறைத்து, சேவை நேரத்தை மேம்படுத்தி, பயணிகளுக்கு தடையற்ற மற்றும் வசதியான பயணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!