Latestஅமெரிக்காஉலகம்மலேசியாவிளையாட்டு

2028 ஒலிம்பிக்கில் திருநங்கைகள் பங்கேற்கத் தடை – IOC அதிரடி

லவ்சான் (சுவிட்சர்லாந்து), மார்ச்-27-2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் திருநங்கை விளையாட்டாளர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

அனைத்துலக ஒலிம்பிக் மன்றமான IOC இந்த அதிரடி முடிவை அறிவித்துள்ளது.

1996-க்குப் பிறகு மீண்டும் பாலின சோதனையையும் அது அறிமுகம் செய்துள்ளது.

இந்த SRY மரபணு பரிசோதனை மூலம் விளையாட்டாளர்களின் தகுதி நிரூபிக்கப்படும்.

இதனால் DSD எனப்படும் பிறப்புறுப்பு வளர்ச்சி குறைபாடுகள் கொண்ட சில விளையாட்டாளர்களும் போட்டியிலிருந்து விலக்கப்படலாம்.

ஆணாக பிறந்து பின்னர் பாலினம் மாறிய ஒருவரை, பெண்கள் பிரிவில் பங்கேற்க அனுமதிப்பது நியாயமாக இருக்காது; காரணம், சிறிய உயிரியல் வேறுபாடுகள் கூட போட்டியில் வெற்றி–தோல்வியை தீர்மானிக்கலாம்.

அதோடு குறிப்பிட்ட சில போட்டிகளில் பெண்களின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலாக அமைந்து விடும் என்பதால், இம்முடிவு அவசியமாவதாக IOC தலைவர் Kirsty Coventry கூறினார்.

இம்முடிவை உலக விளையாட்டு அமைப்புகள் வரவேற்றுள்ளன.

என்றாலும், அனைத்துலக அளவில் நியாயமான போட்டி என்ற பெயரில் எடுக்கப்பட்ட இம்முடிவு, மனித உரிமை விவாதங்களை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!