
குளுவாங், பிப் 6 – 2030 ஆம் ஆண்டுக்குள் நாடு முழுவதிலும் உள்ள 10,000 த்திற்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே நேர முறையை அமல்படுத்தும் திட்டத்தை கல்வி அமைச்சு கொண்டுள்ளது.
இன்றைய நாள்வரை 9,000 த்திற்கும் மேற்பட்ட தொடக்க மற்றும் இடைநிலைப்பள்ளி பள்ளிகள் ஒரே நேர முறையை வெற்றிகரமாக அமல்படுத்தியுள்ளதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடேக் தெரிவித்தார்.
இந்த இலக்கை அடைய உள்கட்டமைப்பு, பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது அவசியம் என்று அவர் கூறினார்.
கல்வித்துறையில் இது மிகவும் ஆக்கப்பூர்வமான மேம்பாடாகும்.
குறிப்பாக இடக் பற்றாக்குறை , பள்ளி வளாகங்கள் மற்றும் கவனம் தேவைப்படும் பிற மேலாண்மை அம்சங்களிலும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
இருப்பினும், ஒரே அமர்வில் பள்ளிக்கல்வியை நடைமுறைப்படுத்துவதே எங்கள் விருப்பம் என்பதோடு , இதனால் பள்ளிகள் மாணவர்களுக்கு மிகவும் பொருத்தமான கற்றல் சூழலை ஏற்படுத்த முடியும் .
இறைவனின் கருணையோடு பல பள்ளிகள் ஒரே நேர பள்ளி அமர்வு கற்றலுக்கு மாறுவதை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
இது கல்விக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற படியாக இருக்கும் என பட்லினா
தெரிவித்தார்.