
கோலாலம்பூர், நவம்பர் 17-மலேசியா வரும் 2048-ஆம் ஆண்டுக்குள் வயோதிக நாடாக மாறும் என கணிக்கப்பட்டுள்ளது.
அப்போது நாட்டின் மக்கள் தொகையில் 14 விழுக்காட்டினர்
மூத்த குடிமக்களாக இருப்பர்.
இது நீண்ட ஆயுட்காலம் மற்றும் குறைந்த பிறப்பு விகிதத்தால் ஏற்படுவதாக, பொதுச் சேவை துறையான JPA தெரிவித்துள்ளது.
இதற்கு தயாராக ஏதுவாக, அரசாங்கம் ‘2025-2045 தேசிய முதியோர் பெருந்திட்டத்தை’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் பொருளாதாரம், வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நீண்டகால பராமரிப்பு ஆகிய 6 முக்கிய அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும்.
இத்திட்டமானது, ஓய்வூதியம் பெறுவோருக்குச் சேவைகளை மேம்படுத்துவதையும், சலுகைகள் திறம்பட வழங்கப்படுவதை உறுதிச் செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக JPA கூறியது.



