
புத்ராஜெயா, செப்டம்பர்-21,
மலேசியாவில் வாகனமோட்டும் உரிமம் வைத்துள்ள 23 லட்சம் பேர் தற்போது செயலற்றவர்களாக பட்டியலிடப்பட்டுள்ளனர்.
அவர்களில் பலரின் உரிமங்கள் காலாவதியாகியோ அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் புதுப்பிக்கப்படாமலோ இருப்பதாக, சாலைப் போக்குவரத்து துறையான JPJ-வின் தலைமை இயக்குநர் Datuk Aedy Fadly Ramli அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
செல்லுபடியாகாத உரிமத்துடன் வாகனமோட்டுவது குற்றமாகும் என்றும், இது சாலைப் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
எனவே 3 ஆண்டுகளுக்கும் குறைவாக காலாவதியான உரிமம் கொண்டவர்கள் அதனை உடனடியாக புதுப்பிக்க வேண்டும்.
அதே சமயம் மூன்றாண்டைத் தாண்டியவர்கள் மீண்டும் ஓட்டுநர் பாடத்திட்டத் தேர்வை எழுதி உரிமத்தைப் பெற வேண்டும் என அவர் தெரிவித்தார்.
வாகனமோட்டுநர்கள் தங்கள் உரிமங்களைச் செயலில் வைத்திருப்பது சட்ட ரீதியாகவும், பாதுகாப்பு ரீதியாகவும் மிகவும் அவசியம் என்றும் அவர் நினைவூட்டினார்.