Latestஉலகம்

24 மணி நேரத்தில் வங்காளதேசத்தில் 2ஆவது இந்து ஆடவர் கொலை

புதுடில்லி, ஜன 6 – வங்கதேசத்தில் மளிகைக் கடை உரிமையாளராகப் பணியாற்றும் 40 வயதுடைய இந்து ஆடவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வங்காளதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த இரண்டவாது சம்பவம் இதுவாகும்.

சரத் மணி சக்ரவர்த்தி ( Sarat Mani Chakraborty) திங்கள்கிழமை இரவு 10 மணியளவில் நர்சிங்டி ( Narsingdi ) மாவட்டத்தில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட காயங்களால் இறந்தார்.

அவர் கொல்லப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஜஷோர்
( Jashore ) மாவட்டத்தில் 45 வயது தொழிற்சாலை உரிமையாளர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

செய்தித்தாளின் தற்காலிக ஆசிரியராகவும் இருந்த ராணா பிரதாப்பை ( Rana Pratap ) ஒரு கும்பல் தலையில் சுட்டுக் கொன்றது, அக்கும்பல் அவரது கழுத்தையும் அறுத்தனர்.

அவரது தலையில் மூன்று முறை சுடப்பட்டதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வங்காளதேசத்தின் மொத்த மக்கள் தொகையில் 7 விழுக்காட்டினர் இந்துக்கள் ஆவர்.

அண்மையக் காலமாக இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களும் வன்செயல்களும் அங்கு அதிகரித்து வருகிறது என்பதற்கு அடையாளமாக திங்கட்கிழமை நடத்தப்பட்ட இரண்டு படுகொலைச் சம்பவங்கள் அமைவதாக கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!