கோலாலம்பூர், டிசம்பர் 9 – மலேசியாவின் முன்னணி கார் கிளப்பான அன்டெரா மோட்டார் ஸ்போர்ட்ஸ், தனது 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை அண்மையில் மிக பிரம்மாண்டமாகக் கொண்டாடியது.
மலேசியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் முன்னோடி எனப் புகழப்படும் இந்தப் கிளப், 1999ஆம் ஆண்டு நான்கு நண்பர்களால் பொழுதுபோக்காக பூச்சோங்கில் தொடங்கப்பட்டது.
அந்த நாள்முதல், உள்ளூர் மற்றும் அனைத்துலக கார் நிகழ்ச்சிகளில் தன்னிகரற்ற சாதனைகளை நிகழ்த்தி வருகிறது அன்டெரா மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப்.
இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சில் பதிவு செய்யப்பட்ட இந்த கிளப், சமூக சேவையிலும் வளர்ச்சியிலும் தொடர்ந்து தனது பங்களிப்பைச் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, 25ஆம் ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, அன்டெரா ரேசிங் என்ற புதிய அத்தியாயமும் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் கண்டுள்ளது.
இது மலேசியாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான track racing, drift racing எனும் சறுக்குப் பந்தயக் கார், கோ கார்ட் (Go Kart) போன்ற கார் பந்தயங்களில் முழுமையாக ஈடுபடுவதற்கான முயற்சியகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பந்தயத் துறையில் புதிய திறமைகளை உருவாக்கி, மோட்டார்ஸ்போர்ட்ஸ் துறையின் வளர்ச்சிக்கு பங்களிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
அவ்வகையில், இதன் சிறப்பு நிகழ்ச்சியில் டத்தோ அப்துல் மாலிக், டத்தோ சுரேஷ் உட்பட அன்டெரா மோட்டார்ஸ்போர்ட்ஸ் கிளப்பின் உறுப்பினர்களும், கார் ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.