Latestஉலகம்

2,600 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து டெக்சஸ் பெண் கின்னஸ் உலகச் சாதனை

டெக்சஸ், நவம்பர்-10, அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த பெண்ணொருவர், 2,600 லிட்டருக்கும் மேல் தாய்ப்பாலை தானம் செய்து கின்னஸ் உலகச் சாதனைப் படைத்துள்ளார்.

Alyse Ogletree எனும் 36 வயது அப்பெண் இதற்கு முன் 2014-ஆம் ஆண்டில் 1,569.79 லிட்டர் தாய்ப்பாலை தானம் செய்து சாதனைப் படைத்திருந்தார்.

வட டெக்சஸில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு அவர் தனது தாய்ப்பாலை தானம் செய்து வருகிறார்.

உண்மையில் அவர் தானம் செய்த தாய்ப்பாலின் அளவு இதைவிட அதிகமாகும்; அதுவும் கணக்கில் வந்திருந்தால் சாதனை அளவு இன்னும் உயர்ந்திருக்கும்.

14 ஆண்டுகளுக்கு முன், முதல் குழந்தையைப் பெற்றப் பிறகு தனக்கு அளவுக்கதிகமாக பால் சுரக்கத் தொடங்கியதாகவும், பெரும்பாலும் அவை கொட்டப்பட்டு விடுமென்றும் அவர் சொன்னார்.

அப்போது ஒரு தாதி கொடுத்த ஆலோசனையின் பேரிலேயே 2010 முதல் தாய்ப்பாலை அவர் தானம் செய்யத் தொடங்கியுள்ளார்.

மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு என்னிடம் பணமில்லை; ஆனால் பெரிய மனமுண்டு.

எனவே தாய்ப்பாலை தானம் செய்வதன் மூலம் என்னால் ஆன சிறு உதவி செய்கிறேன்.

தாய்ப்பால் தானமானது, தம்மைப் பொருத்தவரை உலகிலேயே மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்றென நெகிழ்ச்சியுடன் கூறுகிறார் Alyse.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!