கோலாலம்பூர், நவம்பர்-23, SPM சான்றிதழ் நகல்களை முதன் முறையாக வெறும் பத்தே ரிங்கிட்டுக்கு வாங்கும் வாய்ப்பு பொது மக்களுக்கு வழங்கப்படுகிறது.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் (KLCC) நேற்று தொடங்கி நடைபெறும் 2TM எனப்படும் Program Dua Tahun MADANI கொண்டாட்ட நிகழ்வில், அச்சிறப்பு சலுகை கிடைக்கிறது.
வழக்கமாக 30 ரிங்கிட் கொடுத்து தான் SPM சான்றிதழ் நகலைப் பெற முடியுமென்ற நிலையில், இந்த மடானி அரசாங்கத்தின் இரண்டாம் நிறைவாண்டை ஒட்டி கழிவு வழங்கப்படுவதாக, மலேசியத் தேர்வு வாரியம் கூறியது.
1994-ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகு SPM தேர்வெழுதியவர்கள், KLCC-யில் உள்ள KPM சேவை முகப்பிடங்களில் சான்றிதழ் நகலைப் பெற்றுக் கொள்ளலாம்.
அடையாள அட்டையை காட்டினாலே போதுமானது.
இவ்வேளையில் PMR தேர்வு சான்றிதழ் நகலையும் அங்கே பெற்றுக் கொள்ளலாம்;
ஆனால் அசல் விலையான 30 ரிங்கிட்டில் மட்டுமே அதனைப் பெற முடியும்.
இந்த 3 நாள் நிகழ்வின் கடைசி நாளான நாளை மாலை வரை பொது மக்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.