Latestமலேசியா

3 குழந்தைகளுக்குத் தாயான பகுதி நேரப் பாடகி, மலாக்காவில் காதலனால் கொலை

மலாக்கா, பிப்ரவரி-24 – மலாக்காவில் பகுதி நேரப் பாடகியான பெண்ணொருவர் தனது கள்ளக் காதலனால் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

Pokok Mangga, Seksyen 1, Taman Seri Mangga-வில் உள்ள வாடகை வீட்டில் நேற்று அவர் இறந்துகிடந்தார்.

52 வயது அம்மாது, வெள்ளிக்கிழமையிலிருந்து அறையை விட்டு வெளியேறாததால், அதே வீட்டில் வாடகைக்குத் தங்கியிருந்து இன்னொரு பெண் சென்று பார்த்த போது அவ்விஷயம் அம்பலமானது.

கள்ளக் காதலன் கதவைத் திறந்த போது அம்மாது இரத்த வெள்ளத்தில் கட்டிலில் கிடந்தார்; இதையடுத்து அவரின் நெருங்கியத் தோழியைத் தொடர்புக் கொண்டு வீட்லிருந்த பெண் விஷயத்தைக் கூறினார்.

கொல்லப்பட்டவர் இன்னொருவரின் மனைவியாவார்; அவருக்கு 3 குழந்தைகள் வேறு உள்ளனர்.

இந்நிலையில் தனது கள்ளக் காதலனுடன் 6 மாதங்களாக வாடகைக்கு அந்த அறையில் அவர் தங்கி வந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை இரவு இருவரும் சண்டையிட்டுக் கொண்ட சத்தம் கேட்டதாகவும், வீட்டிலிருந்த பெண் போலீஸிடம் கூறினார்.

போலீஸ் வரும் வரையில் அம்மாதுவின் சடலமருகே அவ்வாடவர் அமர்ந்திருந்தார்.

உடனடியாக அந்நபர் கைதானார்; ஆனால் அவருக்கும் காயங்கள் ஏற்பட்டிருந்ததால் போலீஸார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட 2 கத்திகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!