
கோலாலம்பூர், மார்ச்-27- இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் மட்டும் 106 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான மதிப்பைக் கொண்ட பட்டாசு கடத்தலை போலீஸ் முறியடுத்துள்ளது.
மொத்தமாக 60 சம்பவங்களை அது உட்படுத்திய வேளை, 68 பேர் கைதாகியுள்ளனர்.
முழுமையான கண்காணிப்பு மற்றும் ஒருங்கிணைந்த சோதனைகளின் பலனாக அக்கடத்தல் கும்பல் வீழ்த்தப்பட்டதாக, தேசியப் போலீஸ் படைத் தலைவர் தான் ஸ்ரீ ரசாருடின் ஹுசாய்ன் கூறினார்.
சிறப்பு உளவுத்துறை, பொது நடவடிக்கைப் படை, கடல் போலீஸ், கூட்டரசு சேமப்படை உள்ளிட்ட தரப்புகள் அச்சோதனைகளை மேற்கொண்டன.
நாட்டில் விழா காலங்கள் வரும் போதெல்லாம் இந்த பட்டாசு கடத்தல் கும்பல்கள் தங்களின் வேலையைக் காட்டுகின்றன.
எனவே, பட்டாசுகளை சட்டவிரோதமாக வாங்கும் – விற்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாமென பொது மக்களை IGP அறிவுறுத்தினார்.
அத்தகைய நடவடிக்கைகள் குறித்து தகவல் அளிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.