
கோலாலம்பூர், ஜனவரி-28-கடந்த 3 ஆண்டுகளில் மலேசியாவில் 34,000-க்கும் மேற்பட்ட குடியுரிமை விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
2022-ல் 49,000 விண்ணப்பங்கள் நிலுவையில் இருந்த நிலையில், இந்த முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக உள்துறை அமைச்சான KDN கூறியது.
அதே நேரத்தில், 18,000 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.
மேலும் 3,700 விண்ணப்பங்கள் மட்டுமே 2025 டிசம்பர் 31 நிலவரப்படி இன்னும் நிலுவையில் இருப்பதாக, அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள அனைத்து விண்ணப்பங்களும் இந்த ஆண்டுக்குள் தீர்க்கப்படும்.
புதிய விண்ணப்பங்கள் முழுமையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்பட்டால், ஓராண்டுக்குள் முடிவு செய்யப்படும் என அவர் உறுதியளித்தார்.
எதிர்கால விண்ணப்பங்களும் வெளிப்படைத்தன்மையுடனும் திறம்படவும் செயல்படுத்தப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.



