Latestமலேசியா

30 விழுக்காட்டிற்கும் குறைந்த கட்டணத்தை திருப்பிச் செலுத்தும் கல்வித் திட்டத்திற்கு கடன் வழங்குவதை நிறுத்த பிடிபிடிஎன் பரிசீலிக்கும்

கோலாலம்பூர், நவ 14 – பல்கலைக்கழகங்களில் குறைந்த விழுக்காடு கல்விக் கடணைத் திரும்ப செலுத்தும் கல்வித் திட்டங்களுக்கு கடன் வழங்குவதை நிறுத்துவது குறித்து உயர்க்கல்வி கழக கடனுதவி நிறுவனமான PTPTN தற்போது பரிசீலித்து வருகிறது.

கல்விக் கடன் பெற்ற மாணவர்கள் தங்களது கடன்களை செலுத்துவதை ஊக்குவிக்கும் உள்நாட்டு பல்கலைக்கழகங்களின் முயற்சிக்கு ஏற்ப இது அமைவதாக PTPTN நிர்வாக தலைவர் அகமட் டசுக்கி அப்துல் மஜிட் ( Ahmad Dasuki Abdul Majid ) தெரிவித்தார்.

குறிப்பிட்ட பல்கலைக்கழகங்களில் 30 விழுக்காட்டிற்கும் குறைந்த கட்டணத்தைக் கொண்ட கல்வித் திட்டங்களுக்கு கடன் வழங்குவதை நாங்கள் நிறுத்துவோம் என அவர் கூறினார்.

அனைவரின் நன்மைக்காக, மாணவர்களிடையே கடனை திரும்பச் செலுத்தும் பழக்கத்தை வளர்ப்பதற்கான நடவடிக்கைக்கு பல்கலைக்கழகங்களும் உதவ வேண்டும்.

எப்படியிருந்தபோதிலும் அதிக கட்டணத்தை திருப்பிச் செலுத்தும் விழுக்காட்டைக் கொண்ட படிப்புகளுக்கு நிதியுதவி தொடரும் என்று Ahmad Dasuki கூறினார்.

இந்த முயற்சியானது, PTPTN கடனை அடைப்பதில் கவனம் செலுத்துவதுடன், பட்டப்படிப்புக்குப் பிறகு நல்ல நிதி மேலாண்மை கலாச்சாரத்தை உருவாக்கும் என்று அவர் கூறினார். செப்டம்பர் மாதம்வரை மொத்தம் 74 பில்லியன் ரிங்கிட் கடன்களை PTPTN வழங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!