Latestமலேசியா

37 வயதுடைய ஆடவர் வீட்டில் ஏற்பட்ட வெடிப்பால் முகம் மற்றும் கையில் காயம்

மாராங், நவ 22 – வீட்டிலுள்ள குளிரூட்டியின் சுவிட்சில் ஏற்பட்ட மின் கசிவினால் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து 37 வயதுடைய ஆடவர் ஒருவர் முகம் மற்றும் கையில் காயத்திற்கு உள்ளானார். வேலை முடிந்து அப்போதுதான் வீடு திரும்பிய அந்த ஆடவர் வீட்டில் தனியாக இருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரின்டென்டன் முகமட் சுபியான் ரெட்சுவான் ( Mohd Sufian Redzuan ) தெரிவித்தார்.

Ahmad Noor Izwan Mohd Radzi என்று அடையாளம் கூறப்பட்ட அந்த ஆடவர் கோலாத்திரெங்கானு Sultanah Nur Zahirah  மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதனிடையே தங்களது வீட்டின் கூரை அமைப்பில் ஏற்பட்ட பிளவு மற்றும் அது இடிந்ததால் இந்த வெடிப்பு ஏற்பட்டதாக அகமட் நோர் இஸ்வானின் மனைவி நோர்லிமாசைடா ( Norlimasaida jusoh ) தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!